162. அருள்மிகு பாதாளேஸ்வரர் கோயில்
இறைவன் பாதாளேஸ்வரர்
இறைவி அலங்காரநாயகி
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
தல விருட்சம் வன்னி
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருஅரதைப்பெரும்பாழி, தமிழ்நாடு
வழிகாட்டி தஞ்சாவூர் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் 21 கி.மீ. தொலைவில் உள்ள அம்மாபேட்டை வந்து இடதுபுறம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள அவளிவநல்லூர் கோயில் கடந்து வலதுபுறம் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். அம்மாபேட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ.
தலச்சிறப்பு

Haridwaramangalam Gopuramமகாவிஷ்ணு பன்றி உருவம் எடுத்து பூமியைத் தோண்டிச் சென்று இறைவனின் திருவடியைக் கண்டதால் இத்தலம் 'திருஅரதைப் பெரும்பாழி' என்று அழைக்கப்படுகிறது. 'பெரும்பாழி' என்றால் 'பெரும்பள்ளம்' என்று பொருள்.

மூலவர் 'பாதாளேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், பாணம் கூம்பு போன்ற வடிவத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். மூலவர் முன்பு வராகம் தோண்டிய பள்ளம் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அம்பாள் 'அலங்காரவல்லி' என்னும் திருநாமத்துடன் சுமார் 5 அடி உயரத்துடன் காட்சி அளிக்கின்றார்.

பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், காசி விஸ்வநாதர், சனி பகவான், பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள், சப்த மாதர்கள் மற்றும் நடராஜர் சன்னதிகள் உள்ளன.

காவிரிக் கரையில் உள்ள பஞ்ச ஆரண்யத் (ஆரண்யம் - வனம்) தலங்களுள் இத்தலமும் ஒன்று. கருகாவூர் - முல்லை வனம், அவளிவநல்லூர் - பாதிரி வனம், அருதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) - வன்னி வனம், இரும்பூளை (ஆலங்குடி) - பூளை வனம், கொள்ளம்புதூர் - வில்வ வனம். இந்த ஐந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்தசாமம் ஆகிய காலங்களில் வழிபடுவது சிறப்பு. இவை இன்றும் வழக்கத்தில் உள்ளன.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com